• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் மீண்டும் இயக்கம்..!

Byகாயத்ரி

Sep 7, 2022

கன மழை மற்றும் மண்சரிவு காரணமாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஊட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையிலான ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று மற்றும் நேற்று முன்தினம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தற்போது மண்சரிவு நீக்கப்பட்டு ரயில்பாதை சீரான நிலையில் இன்று முதல் மீண்டும் குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் இன்று சேவை மீண்டும் தொடர்கிறது.