• Tue. Oct 8th, 2024

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு..

Byகாயத்ரி

Apr 26, 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா குறித்து மரணம் குறித்த விசாரணையானது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம் சரியாக கொடுக்கவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் 2 ஆண்டுகள் இந்த விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், மீண்டும் அந்த விசாரணை தொடங்கி தற்போது முழுவீச்சில் அனைத்தையும் விசாரித்து முடித்துள்ளார்கள்.. ஓபிஎஸ், சசிகலா தரப்பு மற்றும் தரப்பு யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ அனைவரையும் விசாரித்து முடித்து உள்ளது. 100% விசாரணை நிறைவு பெற்றுள்ளது..

அடுத்த கட்டமாக ஆணையம் செய்ய வேண்டியது அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.. அந்த அறிக்கையை தயார் செய்யும் பட்சத்தில் தமிழக அரசிடம் எப்போது கொடுக்கும் என்ற கேள்வி இருக்கிறது.. ஒட்டுமொத்த அறிக்கையை தயார் செய்து அதிகபட்சமாக ஒன்றரை மாதத்தில் இருந்து இரண்டு மாதத்திற்குள் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அடுத்த மாதம் 24ஆம் தேதி வரைவிசாரணைக்கான அவகாசம் இருக்கும் நிலையில், அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *