• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர், தேனி எஸ். பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் .

ByI.Sekar

Feb 17, 2024

தேனி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பாக தமிழ் தேசிய பாதுகாப்பு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் கட்சியின் நிறுவனர் சங்கிலி முன்னிலையில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம் கம்பம் அருகே குள்ளப்பன் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி சுட்டு கொலை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கோரி கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து கோரிக்கை மனுவினை தேனி எஸ்பி யிடம் வழங்க சென்றனர்.