• Wed. May 8th, 2024

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ByI.Sekar

Feb 19, 2024

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் ள் கூட்டத்தில் 257 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்விஷ ஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் மொத்தம் 257 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.68400 மதிப்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ 08.40 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும் மற்றும் போதி மனநல காப்பகத்தில் மணநல பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சி பெற ஏதுவாக நன்கொடையாக பெறப்பட்ட 5 தையல் இயந்திரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பிரா ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முகமதிஅலி ஜின்னா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *