• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்

இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

இளையாங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரம் தட்டுப்பாடு நிலவுவதாக வந்த தகவலை அடுத்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பதிவேடுகள் மற்றும் உரங்களின் இருப்பு குறித்து நிர்வாகிகளிடம் விளக்கங்கள் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் வந்திருந்த விவசாயிகளிடம் குறைகள் ஏதும் உள்ளனவா என கேள்வி எழுப்பியதற்கு, விவசாயிகள் முறையாக தேவையான அளவு உரங்கள் வழங்கப்படுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டவர், மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திறக்கவுள்ளதாக தெரிவித்தார்.