• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

ByP.Thangapandi

Oct 16, 2024

பொதுமக்கள் பேரிடர் காலங்களில் ரிஸ்க் எடுக்க கூடாது, மிக மிக அவசிய தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும். நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர், செல்லம்பட்டி பகுதியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் வடகிழக்கு பருவமழை காலம், இந்த காலத்தில் பெருமழை, பெருவெள்ளம், சூறைகாற்று, புயல் காற்று வீசும்., கடந்த ஆண்டு எதிர்கட்சி தலைவர் எடுத்து சொல்லியும் கூட நாங்கள் எத்தனை மில்லிமீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என வீர வசனம் பேசினார்கள், ஆனால் சென்னை மூழ்கி போனதை பார்த்தோம், தூத்துக்குடி, திருநெல்வேலியில் பாதிப்பு ஏற்பட்டது.

இப்போது இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் எல்லோரும், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிற்கிற காட்சியை ஊடகம் மூலம் பார்க்க முடிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது இந்த அரசின் மீது நம்பிக்கை போய் விட்டது. பேச்சளவிலேயே தான் இருப்பார்களே தவிர செயல் அளவில் இல்லை.

தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடக்கிறது, அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் இந்த இருவரை தவிர வருவாய் பேரிடர் மேலாண்மை அமைச்சரை களத்தில் காணவில்லை, மாநகராட்சியை கையில் வைத்திருக்கும் அமைச்சரை காணவில்லை, உள்ளாட்சித்துறை அமைச்சரைக் காணவில்லை.

எனக்கு கிடைத்த புள்ளி விவரங்கள் படி 60% நீர் நிலைகள், கண்மாய்கள், நீர்வழி தடங்கள் தூர்வார படவில்லை, பல இடங்களில் மழை நீர் வடிந்ததாக தெரியவில்லை, மக்களை காப்பாற்ற தாயாக இருக்கிறோம் என்கிறார்கள், எதற்கு தயார் என்றால் மழை வந்தால் ஓடுவதற்கு தான் தயாராக இருக்கிறார்கள்.

நாங்கள் இருக்கும் போது அறிவியல் ரீதியாக செயல்படுத்தினோம், மழை வருவதற்கு முன், மழை பெய்து கொண்டிருக்கும் போது, மழை நின்ற பின் என பணிகளை செய்ய வேண்டும் செய்தோம், ஆனால் என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை, எந்த விவரங்களும் இல்லை.

வெள்ளம் வந்து வடிந்த பின் தொற்று நோய் ஏற்படும் அதை தவிர்க்க முகாம்களை நடத்த வேண்டும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு இணைப்பு இருக்க வேண்டும்., இணைந்து செயல்பட்டால் தான் மக்களை பாதுகாக்க முடியும்.

பேரிடர் காலங்களில் வெற்றி தோல்வி என்பது இல்லை மக்களை பாதுகாப்பாக உயிரிழப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும். இப்போது முதல்வருக்கு போட்டோ சூட், மகனுக்கு போட்டோ சூட் மட்டுமே நடத்துகிறார்கள்.

5000 பேர் தயாராக இருக்கிறோம் என சொல்கிறார்கள், தேசிய பேரிடர் மீட்பு படையை போல் மாநில பேரிடர் படையை உருவாக்கினோம் ஆனால் இன்று அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை.

மக்கள் கண்ணீர் கடலில் தத்தழித்து கொண்டிருந்தார்கள் இப்போது தண்ணீர் கடலில் தத்தழித்து கொண்டிருக்கிறார்கள். அக்டோபர் எந்த தேதியிலும் துவங்கும், செய்தி முன்கூட்டியே என செய்தி இல்லை, அக்டோபர் வந்தாலே ஆயுத்தம் ஆகிவிட வேண்டும்.

பொதுமக்கள் அரசை நம்பி பிரோசனம் இல்லை, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பேரிடர் காலங்களில் ரிஸ்க் எடுக்க கூடாது, மிக மிக அவசிய தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும்.

65 கிலோ மீட்டர் என கணித்து சொல்வார்கள் ஆனால் 150 க்கு மேல் சூறாவளி காற்று வீசும் அது போன்ற நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம். பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களில் அவர் அவர்களுக்கு தெரிந்த வதந்தி யூக செய்திகளை வெளியிடுவார்கள் அதையும் பொதுமக்கள் நம்ப கூடாது.

மழை காலங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், வயதானவர்களுக்கு மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.,

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கு உரிய எச்சரிக்கை கொடுக்க வேண்டும், பேரிடர் காலங்களில் அவர்களை தொடர்பு கொள்வது கடினம், உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் அவர்களையும் பாதுக்காக்க வேண்டும்., கடந்த கஜா புயல் காலத்தில் ஒரு மீனவர் கூட உயிரிழக்காமல் பார்த்துக் கொண்டோம்.

இப்போதும் அதிகாரிகளிடம் கேட்டால் சொல்வார்கள் எத்தனை இடங்களில் பாதிப்பு வரும், தாழ்வான பகுதிகள் எத்தனை என சென்னையில் வடிகால் தோண்டி போட்டது அப்படியே உள்ளது., சென்னையில் போய் சிக்கிக் கொள்ளாதீர்கள் என சொல்லும் அளவு படு மோசமாக இருக்கிறது.

இதையெல்லாம் மக்களிடத்தில் சொன்னால் மக்களின் பாதுகாப்பிற்கு உரிய செய்தியாக இருக்கும். முடிந்தால் ஒளிபரப்புங்கள் மக்களிடத்தில் நன்மை கிடைக்கும் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.