• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கோவையில் 10ம் தேதி முதல் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’..,

BySeenu

Sep 8, 2026

கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் சார்பில், துடியலூரில் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ வரும் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

இது தொடர்பாக கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ் உரிமையாளர் ராஜசேகர் வரவேற்புரையாற்றினார். அசைன் கார்ஸ் உரிமையாளர் அசைன் அலி தலைமை உரையாற்றினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறியதாவது,
கோவை மாவட்ட கார் வியாபாரிகள் சங்கத்தின் ஒப்புதலுடன், 30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த கார் கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழாவை நடத்துகிறோம்.

இக்கண்காட்சி கோவை – மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் வி.ஜி. மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் வரும் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 14-ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் நடைபெற உள்ளது. சிறிய பட்ஜெட் கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை ரூ. 50,000 முதல் ரூ. 2 கோடி வரையிலான பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கார்கள் ஒரே இடத்தில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.கண்காட்சி வளாகத்திலேயே வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உடனடி வங்கிக் கடன் மற்றும் வாகனக் காப்பீடு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

பயன்பாட்டில் உள்ள பழைய காரைக் கொடுத்து மாற்று கார் வாங்கும் ‘எக்ஸ்சேஞ்ச்’ வசதி, கார் உதிரிபாகங்கள் மற்றும் எதிர்கால தேவைகளுக்கான ஆலோசனைகளும் இங்கு கிடைக்கும். சங்கத்தின் உத்தரவாதத்துடன், வாகனங்களின் ஆவணங்கள் அனைத்தும் தீர ஆராயப்பட்டு நம்பகமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்குப் பிடித்தமான கனவு காரை வாங்கிச் செல்லலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் கே.பி.கே. மோட்டார்ஸ் கார்த்திக், ஐ.ஏ.ஜி. கார்ஸ் ராஜா, ரோட் மாஸ்டர் மணிகண்டன், ஆர்.ஆர். கார்ஸ் ராதாகிருஷ்ணன், விஜய் கார்ஸ் கோபி, ஜே.கே.கே. கார்ஸ் ஜெயராமன், சதீஷ்குமார் உள்ளிட்ட கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக எஸ்.கே. கார்ஷாப் உரிமையாளர் சஞ்சீவ்குமார் நன்றியுரையாற்றினார்.