• Mon. Apr 21st, 2025

மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் உற்பத்தி பொருட்கள் வாங்குவோர், விற்போர் சந்திப்பு..

ByR. Vijay

Mar 21, 2025

நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் உற்பத்தி பொருட்கள் வாங்குவோர், விற்போர் சந்தை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், சண்முக பிரபு உள்பட உதவி திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதில் மாவட்டத்தில் உள்ள 200- க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டு அவர்கள் தயாரித்த சமையல் எண்ணெய், கடலைமிட்டாய், தின்பண்டங்கள் மற்றும் அவர்கள் விளைவித்த விளைபொருட்களான வேர்க்கடலை, மாதுளை, வாழை பழங்கள், சிறுதானியங்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். இதில் திரளான வர்த்தகர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து தாங்காது வணிக கடைகளுக்கு வாங்கி சென்றனர்.