

1964 ஆண்டு படித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு மருத்துவம் பார்த்துவரும் பேராசிரியர் அன்பழகனின் பேரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் கூறியது:

இதில் கலந்து கொண்ட அனைவரும் எழுவது வயதை கடந்தவர்கள். மேலும், இதன் சிறப்பு என்னவென்றால் எங்களுக்கு பயிற்சி அளித்த பேராசிரியர்கள், டாக்டர்கள், இங்கே வந்துள்ளனர்.
இதை ஒரு அறுபதாம் கல்யாணம் போல நடத்துகின்றோம் எனக் கூறினார்.



