

2024 ஆண்டிற்கான ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தனிபர் வாருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான அறிவிப்பும் இடம் பெறாதது பெருத்த ஏமாற்றம் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் – அறிக்கை
2024ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய கொண்டு வருவது குறித்து அறிவிப்பு வரும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றைய நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது மிகுந்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தனிபர் வருமான உச்சவரம்பு உயர்த்தி அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பாத்த நிலையில், தனிநபர் வருமான உச்சவரம்பில் மாற்றம் இல்லை பழைய நிலையே தொடரும் என்ற அறிவிப்பும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஒட்டு மொத்தத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை ஏமாற்றி விட்ட ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது.

