• Mon. May 6th, 2024

நவீன இயந்திரம் மூலம் சாலையோரம் தேங்கியுள்ள மணல்கள் அகற்றும் பணியினை, மேயர் இந்திராணி பொன்வசந்த் பார்வையிட்டார்.

ByN.Ravi

Feb 26, 2024
மதுரை மாநகராட்சி  மண்டலம் 3 பெரியார் பேருந்து நிலையம் பகுதிகளில் நவீன இயந்திரம் மூலம் சாலையோரம் தேங்கியுள்ள மணல்கள் அகற்றும் பணியினை, மேயர் இந்திராணி பொன்வசந்த், பார்வையிட்டார்.  
மதுரை மாநகராட்சியின் சார்பில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளான சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், தெருவிளக்குகள் பராமரித்தல், பாதாள சாக்கடை திட்டம், பள்ளி கட்டிடங்கள் புனரமைப்பு, புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுதல் மற்றும் புனரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   
மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் முக்கியமான சாலைகள், பாலங்கள், முக்கிய சந்திப்பு பகுதிகள், மெயின் தெருக்களில் தேங்கியுள்ள மணல்களை கடந்த 02.02.2024 03.02.2024 மற்றும் 05.02.2024 ஆகிய 3 நாட்கள் சிறப்பு பணிகள் மேற்கொண்டு 86.01 கிலோ மீட்டர் தூரத்திற்கு 225 டன் மணல்கள் அகற்றப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 பெரியார் பேருந்து நிலையம் பகுதிகள், மேல வெளிவீதி,வடக்கு வெளிவீதி, யானைக்கல் சிலை வரை உள்ள பகுதிகளில்  நவீன இயந்திரம் மூலம் மணல்கள் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. நவீன இயந்திரம் மூலம் மணல்கள் அகற்றும் பணியினை,  மேயர் பார்வையிட்டு, சாலையோரம் தேங்கியுள்ள மணல்களை தினந்தோறும் ஒவ்வொரு வார்டுவாரியாக திட்டமிடப்பட்டு தொடர்ந்து அகற்றுமாறும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் மணல்களை அள்ளுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நசம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறினார். 
இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், உதவிப்பொறியாளர் ரமேஷ்பாபு  மாமன்ற உறுப்பினர்கள் விஜயா, மகாலெட்சுமி மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *