• Sun. Mar 16th, 2025

சமயநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – ஆர்.பி. உதயகுமார் சிறப்புரை

ByN.Ravi

Feb 26, 2024

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேற்கு, தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், சமயநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் கே. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மலையாளம் , ஒன்றியச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் க. நாகராஜன், விவசாய அணி ராம்குமார், பேரூர் செயலாளர்கள் அழகுராஜா, முருகேசன், வி. கே. குமார், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாமிநாதன், ராசு, மலர் கண்ணன், குருசாமி, ராஜேந்திரன், சோனை முத்து சௌந்தரராஜன், முருகேசன் ,சரிதா பானு, ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில், கலந்து கொண்ட தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர். பி . உதயகுமார், ஜெயலிதாவின் ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் நடிகர் வையாபுரி, நேமம் அன்பு, முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன் ,எஸ். எஸ். சரவணன், நீதிபதி, தவசி மற்றும் அதிமுக நிர்வாகிகள் செல்லம்பட்டி ராஜா ரகு, தமிழ்செல்வன், திருப்பதி, ராமகிருஷ்ணன், ஜெயராமன், வெற்றிவேல், துரை தன்ராஜ், தமிழரசன் ,ஏ. கே. டி ராஜா, லட்சுமி, சிவசுப்பிரமணியம், விஜய பாண்டியன், சக்திவேல், ராமசாமி, பிச்சை ராஜன், அன்பழகன், எம்.வி. பி. ராஜா, காசிமாயன், மகேந்திர பாண்டி, சரவண பாண்டியன், சிங்கராஜ பாண்டியன் மற்றும் வாடிப்பட்டி மு.கா. மணிமாறன், விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி. குமார், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் முடுவார்பட்டி முத்து
கிருஷ்ணன், சேகர், மனோகரன், தென்கரை நாகமணி, வாடிப்பட்டி பாலா, சந்திர போஸ், மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி, மற்றும் மதுரை புறநகர் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் அதிமுகவின் பிற அணி அமைப்பாளர்கள் பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் கிளைச் செயலாளர் பொதும்பு.ஏ எஸ் ராகுல் நன்றி கூறினார். முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமாருக்கு மதுரை புறநகர் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் வான வேடிக்கைகள் முழங்கஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது . தொடர்ந்து, இளைஞர் அணியின் சார்பாக வீரவாள் வழங்கப்பட்டது.