• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மேயர், துணை மேயர் பதவி-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை..!

மேயர் ,துணை மேயர் பதவிகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகதலைமையிலான கூட்டணி மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளது. இதற்கிடையில், நாளை வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கிறார்கள். இந்நிலையில், மேயர், துணை மேயருக்கான மறைமுகத்தேர்தல் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், மேயர் ,துணை மேயர் பதவிகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி அமைச்சர் கே.என் நேரு காங்கிரஸ், மதிமுக , சிபிஎம் மற்றும் விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.