• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தேர்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவாங்க..,

ByKalamegam Viswanathan

Feb 4, 2026

கடந்த சில நாட்களாக அதாவது கடந்த மூன்று நாட்களாக சென்னையில் வந்து ஊரக வாழ்வாதாரத் துறை, அந்தத் துறையின் சார்பாக, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சுமார் 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தங்களுடைய சம்பளத்தை, ஊதிய உயர்வு கேட்டுப் போராடி வராங்க.

ஆனால் நேற்றிலிருந்து அந்தப் பெண்களுக்குக் கடுமையான அடக்குமுறைகள் தமிழக அரசின் சார்பாக செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதிலும் என்னன்னா நேற்று அந்தப் பெண்கள் யாரையும் வந்து ஒரு சாதாரண கழிப்பறை செல்லக் கூட அனுமதிக்காமல், உணவு கூட அவர்கள் உட்கொள்ள விடாமல், கடுமையான அடக்குமுறை தமிழகக் காவல்துறை மூலமாக இந்தத் தமிழக அரசு செய்து வந்தது.

அந்தத் துறை வந்து பார்த்தீங்கன்னா 83-லிருந்து பெண்களோட வாழ்வை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறை. 2017-க்குப் பிறகு அதை வந்து வாழ்வாதார இயக்கமாக, ஒரு பெண்களுக்கான வாழ்வாதார இயக்கமாக மாற்றப்பட்டு சுமார் 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தமிழகம் முழுவதும் அதாவது சுய உதவிக் குழுக்கள், தமிழகம் முழுவதும் இருக்கிற அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் அவர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அவங்களுக்கு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக் கொடுக்கிறது, அவங்களுக்குத் தேவையான மற்ற பயிற்சிகளை அவர்களை ஒருங்கிணைத்து அவங்களுக்கு வந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளை இந்த 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து செஞ்சுட்டு வராங்க.

இவங்கதான் அரசுக்கும் அங்க சுய உதவிக் குழுக்களில் இருக்கிற ஒவ்வொரு தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொரு சுய உதவிக் குழுக்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்படுறாங்க. லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய இந்தச் சகோதரிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக மிகப்பெரிய அடக்குமுறைகள் செய்யப்பட்டு வருது.

இதில் நேற்று ஒரு கொடுமையான சம்பவம் அங்கே நடந்திருக்கிறது. என்னன்னா தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த நுங்கம்பாக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் மூலமாக அவர் வந்து அவர்களை ரொம்பக் கொச்சையாக, அவதூறாக “நீங்க எல்லாம் எதுக்கு ஊர் மேய வந்தீங்களா?”ன்னு கேட்டிருக்கிறார். இன்னும் பல காவலர்கள் வந்து அவர்களை ரொம்ப அவதூறாக, கீழ்த்தரமாக, கேவலமாகப் பேசி அவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்துடன் பண்ணியிருக்காங்க. சோ, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

திரு. உதயநிதி அவர்கள் வந்து நீங்க வந்து பிறப்பால் துணை முதல்வரானீங்க சரி. அதாவது உங்களுக்கு வந்து அரசுச் செலவில் உங்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி உங்களுக்கு ஒரு குறிஞ்சி இல்லம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இல்லத்தில் மக்கள் சந்திப்பு நடத்துறதுக்குத்தான் இந்த மாதிரியான உங்கள் துறையின் கீழ் இருக்கும் மக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கிறதுக்குத்தான் அந்த இல்லம் என்பது உங்களுக்குத் தெரியுமா

உங்களுக்கு வந்து ஒரு புல் தரை அங்கே அரசுச் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தினமும் உங்களுடைய நாயோடு விளையாடி அந்தப் புல் தரையில் விளையாடிப் புகைப்படம் போடும் உதயநிதி, இந்த மாதிரியான பாதிக்கப்பட்ட மக்களை, உங்கள் துறையில் பாதிக்கப்பட்ட மக்களை ஐந்து நிமிடம் கூடச் சந்திக்க உங்களுக்கு நேரமில்லையா?. இது பொதுமக்கள் சார்பாகக் கண்டிப்பாக நாங்கள் வைக்கும் கேள்வி.

ஒரு போராட்டத்தை மக்களுக்காக இவர்கள் வந்து பல பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க வந்து நாலரை வருஷமாக எல்லாத் தரப்பு மக்களையும் ஏமாத்திட்டாங்க. சோ, அதனுடைய வாழ்வாதாரத்தைக் கேட்டு மக்கள் போராடத்தான் செய்வாங்க.

இனிமேல் இந்த மாதிரியான அடக்குமுறைகளை அதிகாரிகள் செய்யக் கூடாதுன்னு கேட்டுக்கிறோம். ஏன்னா இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. இந்த அரசு இதோட கிளம்பிரும். உதயநிதியும் கிளம்பிருவாரு, அவர் வளர்க்கிற அந்த நாயையும் கூட்டிட்டு கிளம்பிருவாரு அந்த குறிஞ்சி இல்லத்தை விட்டு.

இந்தத் தேர்தலில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும். குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு இந்த அதிகாரிகள் செயல்பட வேண்டும். கடைசியாக இந்தத் தவறாக நேற்று அந்தப் பெண்களிடம் அங்கே இருந்த சகோதரிகளிடம் தவறாகப் பேசிய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரும் துணை முதல்வரும் இந்தச் செயலுக்காகக் கண்டிப்பாக வருத்தப்பட்டு அந்தப் பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்ததாக இதே போன்ற ஒரு சம்பவம் வந்து போக்சோ குற்றத்தில் அண்ணா நகர் சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் இதே போன்ற ஒரு 2024-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சோ, இது எல்லாத்தையும் தயவு செய்து முதல்வர் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உதயநிதி அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்துறையை ஏவி இந்தப் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறார். ஆனால், வாழ்வாதாரத்திற்காகப் போராடும் இந்தப் பெண்களின் உறுதி எதற்கும் அஞ்சாது. தமிழக அரசு உடனடியாக இந்தப் பெண்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

அதேபோல், அண்ணா நகர் சிறுமி விவகாரத்தில் நீதிமன்றம் சொல்லியும் நடவடிக்கை எடுக்காதது இந்த அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது. இனிமேலும் இது போன்ற அடக்குமுறைகள் தொடர்ந்தால், தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

அதிமுகாவே சொல்லிட்டாங்க, கூட்டணி வந்து அதிமுக தலைமையின் கீழ் தான் கூட்டணின்னு. விஜய்க்கு அது கூட தெரியல, வெளிய வந்தால்தானே நாட்டு நடப்பு தெரியும் அப்படின்னு இ.பி.எஸ் (EPS) சொல்லிருக்காரே பற்றிய கேள்விக்கு

இந்த ஒவ்வொரு கூட்டணி அமைக்கிறதென்றால், ஒரு கூட்டணியில் 10 பேர் இருக்கிறார்கள், ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த கட்சித் தலைவர்கள் எல்லாம் யார் முன்னாடி போய் சேர்ந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பியூஷ் கோயல் அவர் முன்னாடி ஒரு ஹோட்டல்ல போய் சேர்ந்து, அங்கேயே வந்து அறிவிப்புகள் யார் வெளியிட்டார்? பாரதிய ஜனதா கட்சி தான் வெளியிட்டது. சோ, அவர்கள்தான் இதற்கு முன்னெடுக்கிறார்களே தவிர, அதிமுகாவே இதுல நாங்க எந்த… எங்களுடைய பார்ட் எதுவுமே இல்லை.

அதிமுக வந்து ஊழல் கட்சின்னு சொல்லி சொல்றாரு, ஆனா அதே ஜெயலலிதாவை ரோல் மாடலா (Role Model) வச்சு சொன்னாரு. இப்ப எங்களை வந்து குற்றம் சொல்றாரு விஜய்ன்னு சொல்லி சொல்றாங்களே பற்றிய கேள்விக்கு

புரட்சித் தலைவரையும் சரி, புரட்சித் தலைவி அம்மாவையும் சரி, திமுக எல்லா வழியிலும் ஒடுக்கப் பார்த்தார்கள். எல்லா வழியிலும் எப்படி எப்படி ஒடுக்கப் பார்த்தாங்க, அம்மா மீது எவ்வளவு எவ்வளவு பொய்யான கேஸ்கள் போட்டாங்க, எல்லாம் என்ன பண்ணாங்க? அவங்களை வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கட்சி ஆபீஸ்க்கு கூட வரவிடாமல் எப்படி ஒடுக்குனாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். என்னென்ன பொய் வழக்குகள் போட்டாங்க, அது எப்படி கையாளப்பட்டது வழக்குகள்… சில வழக்குகள் தவறாகக் கையாளப்பட்டிருக்கலாம். அம்மாவோட வழக்குகள் பல வழக்குகள் தவறாகக் கையாளப்பட்டிருக்கலாம். சோ, அங்க வீட்டில் இருந்தவர்கள் பெயர்களைப் பயன்படுத்தித் தவறாகக் கையாளப்பட்டிருக்கலாம். கண்டிப்பாக அவர் மனசாட்சிக்கு பொதுவாக அவர் அம்மா வந்து எந்தத் தவறும் செய்யவில்லை என்பது மக்களுடைய கருத்து, எங்களுடைய கருத்து.

அதிமுக இரண்டாவது கட்டத் தேர்தல வாக்குறுதி கொடுத்திருக்காங்க. அதுல என்னன்னா 2000 முதியோருக்கு ஓய்வூதியம், அப்புறம் சிறுபான்மையினர் பெற்ற கூட்டுறவு கடன் தள்ளுபடி, அப்புறம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம், அப்புறம் மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டுறவு தள்ளுபடின்னு… அதை எப்படிப் பார்க்கிறீங்க பற்றிய கேள்விக்கு

அவங்க அவங்களுடைய வாக்குறுதிகள் என்ன வேணாலும் அள்ளி வீசிட்டுப் போகலாம். திமுக கூடத்தான் போன தடவை 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொரு நாள் அள்ளி வீசிட்டுப் போனாங்க. இப்ப வாக்குறுதிகளை நிறைவேற்ற நம்பிக்கை யார் கொடுக்கிறான்னுதான் பார்க்கணும். இவர்கள் எல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் கடந்த காலத்துல எல்லாம் நிறைவேத்துனாங்களா இதுவரைக்கும் திமுக கொடுத்த எந்த வாக்குறுதியாவது நிறைவேத்துனாங்களா அதைக் கேட்கப்போற மக்கள்ட்ட கூட இதுவரைக்கும் செவிசாய்க்கவில்லை

41 உயிர் பலியான குற்ற உணர்ச்சி இல்லாமல் மேடையில் ஆடுறாரு, அவர் வாங்குனதுல வந்து கருப்பு குறைவு வெள்ளை அதிகம் அப்படின்னு ஜெயக்குமார் சொல்லிருக்காரே பற்றிய கேள்விக்கு

அதிமுகவில் இருக்கும் பேசுபவர்களைப் பற்றி நாங்கள் பேச வேண்டாம் என்று நாங்கள் அதற்கே தெளிவான விளக்கங்களைக் கொடுத்துவிட்டோம். மக்களிடம்… மக்களிடம்… மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை. ஏன்னா அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு விஷயம் அவர்களே இன்னைக்கு மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பற்றி நாங்க பேச விரும்பவில்லை. அதுக்குத் தேர்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவாங்க. இது நாங்க பலமுறை விளக்கம் கொடுத்துட்டோம்.