• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்டத்திற்கு மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

Byவிஷா

Apr 25, 2023

மதுரை சித்திரை திருவிழாவின் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5ஆம் தேதியன்று வருவதால், அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் (ஏப்.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, இரவு என இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி பட்டாபிஷேகம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. மே 1-ந் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக மே 2-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். அடுத்த நாள் 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். மே 4-ந் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான மே 5-ந் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மே 5-ந் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.