• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறவித்திருந்தது.

இதகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக சார்பில் மக்களின் குறைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கவனம் செலுத்தாத ஆளும் கட்சியான திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 17-12-2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்ட ஆர்பாட்டமாக நடைபெற இருப்பதாக அதிமுக தலைமைக் கழகம் அறவித்திருந்தது.இது கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதலுடன் இக்கண்டன ஆர்பாட்டம் நடக்க உள்ளதாக அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுருந்தது.

இதன்படி விருதுநகர் கிழக்கு மேற்கு வடக்கு ஒன்றிய கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விருதுநகர் மேற்கு மாவட்டகழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வரும் 17.12.21 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் விருதுகர் அகமதுநகர் மாவட்டமையநூலகம் அருகில் மேற்குமாவட்டகழகசெயலாளர் K.T.ராஜேந்திரபாலாஜி தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெறுகிறது. கழகத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சிஅமைப்பு பிரதிநிதிகள்,கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்வார்டு கழகச் செயலாளர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளும்படி விருதுநகர் கிழக்கு மேற்கு வடக்கு ஒன்றிய கழகம் அறிவித்துள்ளது.