• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தருமபுரியில் மாவோயிஸ்டு கைது

ByA.Tamilselvan

Aug 20, 2022

தருமபுரியில் பதுங்கியிருந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மாலோயிஸ்ட் கைது
மகாராஷ்டிர மாநிலம், களிரோலி மாவட்டம், தர்மராஜா அடுத்த பங்கரபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டா என்கிற சீனிவாசமுல்லாகவுடு (வயது23). மாவோயிஸ்டு பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவரான இவர் மீது போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தமிழகம் வந்தனர். பின்னர் பயங்கரவாதியின் செல்போன் எண்ணை வைத்து பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். நேற்றிரவு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி மாருதி நகரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே மகாராஷ்டிர போலீசார் ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார்கள் விரைந்து சென்று சிவக்குமார் வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த சீனிவாசமுல்லாகவுடுவை உபா சட்டத்தின் கீழ் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை மகாராஷ்டிராவிற்கு போலீசார் அழைத்து சென்றனர். பயங்கரவாதியை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.