• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மங்காத்தா 2?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக ஏற்கனவே லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவித்து விட்டது.

சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசில் பேசிய விக்னேஷ் சிவனிடம், அஜித் ரசிகர் ஒருவர் ஏகே 62 கதை பற்றி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விக்கி, இந்த கதைக்காக நான் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளேன். நிச்சயம் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என கூறி இருந்தார். மேலும், மங்காத்தா படத்தில் சில சீன்கள் போல ஏகே 62 படத்தில் ட்ரை பண்ணலாம் என இருக்கிறேன் என கூறி உள்ளார். இதை கேட்ட நெட்டிசன்கள், விக்னேஷ் சிவனை கலாய்த்து வருகின்றனர்.