• Sat. Apr 27th, 2024

குழந்தைக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் துணிகரம்

தமிழ்ச் சினிமாவில் எத்தனையோ கடத்தல் கதைகள் கூறப்பட்டுள்ளன. சில கடத்தல் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் . கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியுள்ளதாக கூறுகிறார் இந்தப் படத்தின் இயக்குநர் பாலசுதன்.ஒரு தம்பதி அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அப்போது அவர்கள் செல்லும்வாகனத்துக்குள் ஒரு குழந்தைக் கடத்தல் கும்பல் வலுக்கட்டாயமாக ஏறிக் கொள்கிறது. அவர்கள் கண்ணெதிரே குழந்தை கடத்தப் பட்டு இருப்பதை அறிகிறார்கள். அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றார்களா? கடத்தப்பட்ட குழந்தை மீட்புக்கு ஏதாவது உதவி செய்தார்களா? இப்படி ஒரு குழந்தையின் கடத்தலைச் சுற்றிப் பயணிக்கின்ற திரைக்கதையே முழுப் படமாகி உள்ளது என்கிறார் இயக்குநரவிறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் துணிகரம் படத்தின் இரண்டாவது பாதியின் கதை முழுக்க ஒரு ஆம்புலன்சில் பயணிக்கிறது. விரைவாக ஓடும் ஆம்புலன்சுடன் கதையும் பரபரப்பாக ஓடுகிறது. இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். இப்படம் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இளம் தம்பதியினருக்கும் மறக்க முடியாத படமாகவும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி ?அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாகவும் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் பாலசுதன்இப்படத்தை “ஏ4 மீடியா ஒர்க்ஸ் ” சார்பில் வீரபாண்டியன் மற்றும் டெய்சி வீரபாண்டியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *