திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி கிராமம் தேத்தாம்பட்டி கிராமத்தில் மந்தை முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், மலைக்கேணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய நீரை யாகசாலையில் வைத்து நான்கு கால யாகசாலை பூஜை வேத மந்திரங்கள் முழங்க வேள்விகள் வளர்க்கப்பட்டு பின்பு புனித நீரை கோவிலில் சுற்றி வலம் வந்த பின்பு கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் தேத்தாம்பட்டி, பூசாரிபட்டி, சிறுகுடி, நல்லகண்டம், ஒடுகம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.