• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிறுமியை பாலியல் வன்புணர்வு இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை..,

BySubeshchandrabose

Dec 17, 2025

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த வெயில் முத்து (வயது 22) என்ற இளைஞர் 2022 ஆம் ஆண்டு ஒன்பதாவது மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்புணர்வில் பலமுறை ஈடுபட்டதாகவும், இதை வெளியில் சொன்னால் தாய், தந்தையை கொலை விடுவதாக மிரட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுது.

இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று வழக்கு விசாரணை முடிவுற்று இளைஞர் வெயில் முத்து குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக 2019 ஆம் ஆண்டு குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு திருத்த சட்ட பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 10000ரூபாய் அபராதம், அபராத இந்திய தண்டனைச் சட்டம் 376 (3) பிரிவின் கீழ் 20 வருட கடுங்காவல் காவல் சிறை தண்டனை என் இரண்டு பிரிவின் கீழ் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறை தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

மேலும் சிறுவனின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்காக தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.