கடந்த 2019 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 30 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.1,00,000 அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம், மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொளத்தூர் பகுதியில் சிவகங்கை சேர்ந்த மணிகண்டன் (29/25) த/பெ முருகேசன், 14A-கருவியாப்பட்டி தெரு, பாலையூர், கண்டனூர் அஞ்சல், காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம். என்பவர் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக மேற்படி எதிரியின் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண்: 208/2019 u/s Girl missing 366 (A) IPC and 5(l) r/w 6 of pocso act 2012* வழக்கை பதிவு செய்த உதவி ஆய்வாளர் கண்ணுசாமி எதிரியை தேடி ஆந்திரா மாநிலம் சென்று, அங்கு இருந்து எதிரியை அழைத்து வந்து பாடாலூர் காவல் ஆய்வாளர் சுகந்தி ஒப்படைத்து எதிரியை மகளிர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்கள்.
பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் இன்று 25.03.2025-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளி மணிகண்டன் (29/25) த/பெ முருகேசன், என்பவருக்கு 366 (A) IPC க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம் விதித்தும், 5 (l), 6 of Pocso act – 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம் . அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் இதன்படி குற்றவாளிக்கு 30 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1,00,000 ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கண்ணுசாமி, மற்றும் நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் சுசிலா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா வெகுவாக பாராட்டினார்கள்.