• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்கூட்டரை சுத்தம் செய்ய தேசியக்கொடியை பயன்படுத்திய நபரின் மீது சட்டம் பாய்ந்தது..

Byகாயத்ரி

Sep 8, 2022

டெல்லியில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், 52 வயது முதியவர் தனது இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், அந்த நபர் தனது ஸ்கூட்டரை தேசிய கொடியால் சுத்தம் செய்து தூசி துடைப்பதுபோல் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, அந்த நபரின் மீது 1971 தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் பிரிவு 2ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.