விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்டேட் பாங்க்கிலிருந்து அ.இராமலிங்கபுரத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் எடுத்து உள்ளார்.

மேலும் பணத்தை எடுத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்த சிதம்பரம் பணத்தை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு வங்கி வாசலில் இருந்த பழக்கடையில் கொய்யாப்பழம் வாங்கி உள்ளார்.
மேலும் கொய்யாப்பழம் வாங்கி விட்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை சிதம்பரம் எடுக்க வந்த போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் இது குறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக சாத்தூர் நகர் காவல் துறையினர் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பணத்தை திருடிய நபரை வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஹோசமணே பத்ராவதி, சுபாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மணா என்பவரது மகன் குமாரா என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 4,40,000 பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா வேறு நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.