• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மீண்டும் இணையும் மம்மூட்டி – மோகன்லால் கூட்டணி!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜிக்காக மீண்டும் இணைய உள்ளனர்.

மலையாள சினிமாவின் இருபெரும் சூப்பர் ஸ்டார்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர்கள் மம்மூட்டியும் மோகன்லாலும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக மலையாள சினிமா சங்கத்தின் நிதிக்காக ஒட்டுமொத்த மலையாள சினிமா கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கிய ‘ட்வண்ட்டி ட்வண்ட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் பிரம்மாண்டமாக உருவாக்கும் ஆந்தாலஜியில் இருவரும் நடிக்க உள்ளனர். இந்த ஆந்தாலஜியின் கதைகள் அனைத்தும் எழுத்தாளர் எம் டி வாசுதேவன் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட உள்ளன. மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களான பிரியதர்ஷன், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோர் இந்த ஆந்தாலஜியை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.