தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பெரியளவில் எதிர்பார்க்கப்படும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என சமீபத்தில் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது.இதனிடையே ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கள் பாடல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்த்தனர்.ஆனால் தற்போது வரை அது குறித்த எந்தஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.இதனிடையே டாக்டர் பட சென்சேஷன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி பீஸ்ட் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் பீஸ்ட் குறித்து பேசியுள்ளார். அதில் பீஸ்ட் திரைப்படம் நிச்சயம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளார். மேலும் திரையரங்குகள் எதுவும் மூடப்படவில்லை என்றால் கண்டிப்பாக ஏப்ரல் 14 பீஸ்ட் ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளார்.