• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை கோவிலாங்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு

Byp Kumar

May 8, 2023

மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ளவர்கள் பெயரில் முறைகேடு நடப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயந்தி முத்துராமன் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளராக ஜெயபாலன் பணியாற்றி வருகின்றனர்
இந்த ஊராட்சியில் 12 உறுப்பினர்கள் உள்ளனர் இதில் திமுகவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் , பாமக உள்ளிட்ட மற்ற ஆறு உறுப்பினர்களும் உள்ளனர் இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் திமுக உறுப்பினர் அல்லாத ஆறு உறுப்பினர்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியோ, புதிய திட்ட பணிகளோ நடைபெறவில்லை எனவும் மேலும்அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பா.ம.க மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தனர் அப்போது மாவட்ட ஆட்சியர் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்குமாறு தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில் இன்று பாமக மாவட்ட தலைவர் முருகன் மற்றும் ஊராட்சி உறுப்பினர் ஜெயக்கொடி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயபாலன் அவரின் அண்ணன் பால்ராஜ் கடந்த இரண்டு 2017 ஆம் ஆண்டு மரணமடைந்து விட்டார் ஆனால் அவரது பெயரில் 2022 ஆம் ஆண்டு வரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்ததாக முறைகேடாக பணம் கையாடல் செய்ததாகவும் இதேபோல் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பாண்டியம்மாள் கோவிலாங்குளம் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் பிரியா என்பவர் பெயரிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக முறைகேடுகளுக்கான உரிய ஆவணங்களுடன் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மேலும் முறைகேடுகள் குறித்து ஊராட்சி மன்றத்தில் கேள்வி எழுப்பியதால் தங்களை தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்