• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மல்லாங்கிணர் வே. தங்கப்பாண்டியன் நினைவு அரசு கிளை நூலகத்தில் புரவலர் சேர்ப்பு நிகழ்ச்சி

ByK.RAJAN

Mar 14, 2024

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் வே. தங்கப்பாண்டியன் நினைவு அரசு கிளை நூலகத்தில் இன்று 14-03-2024 வியாழக்கிழமை வாசகர் வட்டத்தின் சார்பாக புரவலர் சேர்ப்பு நிகழ்ச்சி மற்றும் போட்டித் தேர்வு பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மல்லாங்கிணர் பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் இருதயம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் மல்லாங்கினர் அரசு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் பொ. கர்ணன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளித்து தன் குடும்பத்தார் நான்கு பேருடன் நூலகத்தில் 20,000 செலுத்தி பெரும் புரவலராக இணைந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் P.கர்ணன் 5000/-, கா.பாரதி 5000/-, Dr. தீபக் கபிலன். 5000/- , Dr. பிரியதர்ஷினி. 5000/- செலுத்தி புரவலராக இணைந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நூலகர் திரு குணசேகரன் நன்றி கூறினார்.