விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பொற்கை பாண்டியன் கவிதை மன்ற கிளையின் சார்பில் கவியரங்க நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவுக்கு கவிஞர் பொற்கை பாண்டியன் தலைமை வகித்தார். பட்டிமன்ற நடுவர் அவனி. மாடசாமி முன்னிலை வகித்தார். கவிஞர் சுரேஷ் ராமலிங்கம் வரவேற்றார். விழாவில் நானொரு பூக்காடு, ஆண்டாள் அருளமுதம் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. கவிஞர் முருகேஸ்வரி . ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் இளஞ்சேரலாதன் அமுதம் நூலையும் பொற்கைப் விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் கல்லூரணி முத்து முருகனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புலவர் வலங்கைமான் வேல்முருகன் தலைமையில் கவிஞர்கள் . காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் அசோக்குமார், டாக்டர். தனலட்சுமி , ஆசிரியை ராமலட்சுமி எழுத்தாளர் தமிழழகி, கவிஞர் செல்வமீனாள் ஆகியோர் கவிதை வாசித்தனர். கவிதை மன்றத்தின் செயலாளர் ஈஸ்வர ராஜா நன்றியுரை கூறினார்.