• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் பேராசிரியர் கைது

ByKalamegam Viswanathan

May 1, 2023

மதுரை கப்பலூர் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் பேராசிரியர் கைது.
மதுரை கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் துறை பேராசிரியர் ரகுபதி என்பவரை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை.
மதுரை கப்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் தமிழ் துறையில் தொகுப்பூதிய பேராசிரியராக பணியாற்றி வருபவர் பேரையூர் அருகே ஏழுமலை கிராமத்தை சேர்ந்த ரகுபதி., இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்லூரியில் பணியாற்றி வருகிறார். ரகுபதிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்., சில ஆண்டுகளாக போதைக்கு அடிமையான ரகுபதியை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் கடந்த 3 வருடமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் பேராசிரியர் அவர்களுடன் ரகுபதி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் இருந்து வந்த ரகுபதி அவருடன் நெருக்கமாக பழக முயற்சி செய்துள்ளார். அவ்வப்போது பெண் பேராசிரியருக்கு கடந்த மூன்று மாத காலமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அடிக்கடி ரகுபதி அளித்த பாலியல் தொந்தரவு காரணமாக பெண் பேராசிரியர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பெண் பேராசிரியர் கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுபதியை நேற்று இரவு கைது செய்திருந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் வகுப்பறை நேரங்களில் கூட குடித்துவிட்டு மது போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் ஆஸ்டின் பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.