• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மலையாளத்திரைப்பட இயக்குநர் வினு மறைவு..!

BySeenu

Jan 11, 2024

மலையாளத் திரைப்பட இயக்குனர் மலையாள திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் மாலை 3 மணி அளவில் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1995 ஆம் ஆண்டு “மங்களம் வீட்டில் மனேசரி குப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இவர். கடந்த 20 வருடமாக கோவை சிங்காநல்லூர் சென்ரல் ஸ்டுடியோ அருகில் ஆகாஷ் ஹொம்ஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறார். நாளை காலை 10.30 மணிக்கு கோவை நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
பிரபல நடிகர் ஜெயராம் நடித்த “ஆயுஸ்ஷ்மான்பவா” “குசுர்திகாற்று'” பர்த்தாவு உத்தியோகம்” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.