• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மநீம கட்சி குழந்தை போன்றது – கமல்ஹாசன் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்தபுரம் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் பேசுகையில், ‘சுகாதாரம் முற்றிலும் சீர்கேடாக உள்ளது. இதனால் குழந்தைகளை சாலையில் புழுதி காட்டில் விளையாட தவிர்க்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரம் உங்கள் கையில் உள்ளது என்பதை மக்களுக்கு நியாபகம் படுத்தும் கட்சியாக மநீம இருந்து வருகிறது.

586 கோடி செலவில் மதுரையில் வளர்ச்சி பணிக்கு செலவிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். அதற்கான சுவடே இல்லை. மநீம கட்சி குழந்தை போன்றது, நல்ல குழந்தையாக கட்சி வளரும். ஒரு கோடி செலவு செய்து கவுன்சிலராக போட்டியிடுவோர் வெற்றி பெற்ற பின் அதனை மீட்டெடுக்கதான் முயற்சி செய்வார்கள் அதனை தடுக்க வேண்டுமென்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிடுவோர்களுக்கு வாக்காளிப்பது மக்களின் கடமை!’ என்றார்!