• Fri. Apr 26th, 2024

கிரிக்கெட்டில் உங்கள் பாணியில் தனி முத்திரை பதியுங்கள்..,முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன்ரமேஷ் அறிவுரை..!

ByKalamegam Viswanathan

May 3, 2023

“தோனியாக வேண்டும் கோலியாக வேண்டும் என்று நினைக்காதீர்கள் உங்களுடைய பாணியில் விளையாடுங்கள் தனி முத்திரை பதியுங்கள்” என வேலம்மாள் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமை துவக்கி வைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.
வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில் கோடைகால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாமை துவக்கி வைக்க வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் பயிற்சி முகாமை துவக்கி வைத்து பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வந்த 180 மாணவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார்.


கிரிக்கெட்டில் நான் விளையாடும் போது சில பந்துகளை அடிக்கையில் எதிரணி வீரர்களிடமே போகும் அப்போது ரொம்ப மனசோர்வடைவேன், என்னுடன் விளையாண்ட வீராட்கோலி அன்று இரவு என்னை சந்தித்து கூறும்போது நீ நன்றாகத்தான் விளையாடினாய் பந்து எதிர்ணி வீரர்களிடம் போகும் என்று கவலைப்படாதே ஒவ்வொரு பந்தையும் விளையாடும் போது போர், சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது.
ஒவ்வொரு சூழ்நிலையும் எந்த மாதிரியான பந்து வருது என்று அதை கவனித்து ரசித்து ஆட வேண்டும் அப்பொழுதுதான் கிரிக்கெட்டில் மேன்மேடைய முடியும் என கூறினார். இதனால்தான் வீராட்கோலி கிரிக்கெட்டில் மூன்று நாள் நிலைத்து விளையாடக்கூடிய ஆள் என புரிகிறது. இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள் தோனி கூறும் போது ப்ராசஸ் என்று கூறுவார். உங்களுக்கென்று தனி பணியை உருவாக்குங்கள்; சச்சினை பார்த்து தோனி விளையாடவில்லை தோனியை பார்த்து கோலி விளையாட வில்லை அவர் அவர்கள் தனி பாணியை உருவாக்கினால் தான் நிலைத்து நின்றார்கள். அதேபோல் உங்களுக்கு என்று தனி முத்திரை பதியுங்கள். முன்பு கிரிக்கெட்டில் விளையாடாதே எனக் கூறிய பெற்றோர்கள் இப்போது தங்கள் பிள்ளைகளை கிரிக்கெட் விளையாட ஆர்வமாக சேர்த்து வருகின்றனர்.
நீங்கள் நான்காண்டு காலம் நிலைத்து விளையாடினால் போதும். கிரிக்கெட் வீரர் என்பது நகரங்களில் இருந்து உருவாகும் சூழ்நிலையை மாற்றி ஜார்க்கண்ட் இருந்து கூட உருவாகும் என்ற சூழ்நிலையை தோனி உருவாக்கினார் அவர் வரும்போது கிரிக்கெட் மைதானமே விறுவிறுபடைகிறது. நான்காண்டு காலம் என்பது ஒரு அணுகுமுறைக்காக தான் கூறுகிறேன் 40 வயது வரை கூட விளையாடலாம் ஆகையால் ஐபிஎல் போன்ற போட்டிகளில் பங்கேற்க நிறைய வாய்ப்புள்ளது உங்களுக்கென்ன தனி முத்திரை பதியுங்கள்
பயிற்சி முகாமிற்காக காலை 5 மணிக்கு எழ வேண்டும் என சோர்வடையாதீர்கள். உங்கள் பெற்றோரும் உங்களுக்காக ஒத்துழைப்பு தருகிறார்கள். அவர்கள் கூறுவதை கேட்டு சிறப்பாக பயிற்சி பெற்று சாதனை புரிய வாழ்த்துக்கள் என கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இதில் 180 வீரர்கள் பங்கேற்று பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும் இப் பயிற்சி முகாமில் இரவு விளையாடக்கூடிய வகையில் மின்னொளி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலம்மாள் கிரிக்கெட் அகாடமி சிறப்பு பயிற்ச்சியாளர் சிவ சிதம்பரம், மற்றும் ரமேஷ் |கார்திக் ஆகியோர் பயிற்சி வழங்க உள்ளனர்
பயிற்சி முகாம்களுக்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாயும் காலை 6 மணி முதல் 8:30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் ஆறரை மணி வரையிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது என கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *