அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமையில்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதயம், குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வழக்கறிஞர் பிரின்ஸ் வாழ்துறையுடன், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155_ வது பிறந்த நாள் பாதயாத்திரை இன்று மாலை (அக்டோபர்_05)மாலை. மயிலாடியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபம் முன்பிருந்து தொடங்கியது.
ஊர்வலம் தொடங்குவதற்கு முன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதயம் நடைபாதையின் நோக்கம் நாளை ஒன்றியத்தில் இந்திய கூட்டணி அமைக்கும் அரசின் பிரதமராக இளம் தலைவர் ராகுல் காந்தியை அமர்த்துவதற்கான தேசத்தந்தை காந்தி மகானின் 155_பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த பாதை யாத்திரையின் நோக்கம் என தெரிவித்தார்.

பாதயாத்திரையை தொடங்கி வைத்த குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் மத்தியில் மோடியின் தலைமையில் இருக்கும் மக்கள் விரோத மோடியின் ஆட்சியை அகற்றும் வரை. கன்னியாகுமரி முதல் , காஸ்மீர் வரை காங்கிரஸ் கட்சியும், இந்திய கூட்டணி கட்சியும், இணைந்து களத்தில் நிற்கிறது. கன்னியாகுமரியில் இருக்கும் நாம் இன்னும் இரண்டு நாட்களில் காஷ்மீரில் பாஜகவின் தோல்வியை கொண்டாட இருக்கிறோம் என தெரிவித்தார்.

அகஸ்தீஸ்வரம் வடக்கு, தெற்குப் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள், குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாதை யாத்திரையில் பங்கேற்றனர்.


பாதை யாத்திரை போக்குவரத்துக்கு பாதிப்பில்லமல் இருவர், இருவராக சாலையின் இடது பக்கமாக நடந்து சென்றனர். காவல்துறையினரும் பாதையாத்திரை நிறைவடையும் வரை பாதுகாப்பு பணியில் உடன் சென்றனர்.
