• Fri. Jan 24th, 2025

மதுரை எஸ்.எஸ்.காலனியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

Byகுமார்

May 19, 2024

மதுரை எஸ்.எஸ்.காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை மகாகணபதி ஹோமம், மங்கள இசை, தமிழ் திருமுறை விக்னேஸ்வர பூஜை யாகசாலை பிரவேசம் மஹா பூர்ணாஹூதி தீபாரதனை கோபூஜை இரண்டாம் யாகசாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க மங்கள இசை முழங்க யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கலசநீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. காளியம்மன் சிலைக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தகோடி பொது மக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளையும் அன்னதானம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் சிறப்பாக செய்தனர். பக்த கோடி பொதுமக்கள் காளியம்மன் அருள் ஆசி பெற்று சென்றனர்.