• Sat. Apr 27th, 2024

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்..,
ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் மேல்சிகிச்சைக்காக அனுமதி..!

Byகுமார்

Feb 7, 2022

மதுரை ராஜிவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரன் மேல்சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு. கட்ட மருத்துவபரிசோதனை நடத்தப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசியான ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி பரோல் வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன் அவரது தாயார் ராஜேஸ்வரி தங்கியுள்ள தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் தங்கிவந்தார்.
இந்நிலையில் பரோல் காலத்தை இரண்டு முறை தமிழக அரசு நீடித்து வரும் 15ஆம் தேதியுடன் பரோல் முடிவடையவிருந்த நிலையில் இன்று காலை திடிரென நெஞ்சுவலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சூரப்பன்பட்டியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரவிச்சந்திரனுக்கு மேல்சிகிச்சை மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனை அவசர வார்டு பிரிவில் ரவிச்சந்திரனுக்கு மருத்துவர்கள் இரத்த அழுத்தம், சிறுநீர், சளி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். ரவிச்சந்திரன் மருத்துவபரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அவருடன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். மருத்துவபரிசோதனைக்கு பின் மருத்துவர்கள் அளிக்கும் பரிசோதனை முடிவை பொறுத்து பரோல் நாட்களை நீட்டிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *