மதுரை திருமோகூர் அம்மாபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான நாகராஜ் என்பவர் கடந்த மார்ச் 28ஆம் தேதி தலையில் பலத்த காயம்மடைந்து உயிரிழந்த நிலையில் இருந்தார்.
மேலும் தனது கணவரின் மரணம் குறித்து காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தி, கணவரை கொலை செய்த நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி நாகராஜின் மனைவி பாக்கியா மதுரை மாவட்ட ஆட்சியரின் காரின் முன்பாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் காரில் இருந்து இறங்கி வந்து பெண்ணிடம் மனுவை பெற்று உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதாக தெரிவித்தோடு, இதுபோன்ற தவறான முறையில் ஈடுபடுவது குற்றசெயல் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும் எனவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.