• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

Byவிஷா

Mar 20, 2024

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் பக்தர்கள் அனுமதியுடன் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேதிகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 19 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20ஆம் திக்குவிஜயமும், ஏப்ரல் – 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் ஏப்ரல் 22 ஆம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறவுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
மதுரையின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.