• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்

Byp Kumar

May 3, 2023

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்ள் சுவாமி தரிசனம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று மதுரையில் நடைபெற்றது நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வரவேற்று தரிசனம் செய்தனர்.


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 23.ஆம் தேதி சித்திரை திருவிழாவில் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.மேலும் விழாவில் மீனாட்சி பட்டாபிஷேகம் , திருக்கல்யாணம் என முக்கிய விழாக்கள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும் , அருள்மிகு மீனாட்சிஅம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. கீழமாசி வீதி தேரடியில் துவங்கிய இந்த தேரோட்டம் தொடர்ந்து தெற்கு மாசி வீதி , மேலமாசி வீதி , வடக்குமாசி , வழியாக வலம் வந்து நிலையை அடையும்.தேர் வலம் வந்த நான்கு மாசி வீதிகளிலும் , பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் நகரின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்ததுடன் நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
இந்நிலையில் சித்தரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் 5-ம் தேதி நடைபெறுவதையொட்டி நகரமே விழா கோலம் பூண்டுள்ளது .