புதுச்சேரி தமிழக எல்லையான கோட்டகுப்பம் முன்பு புதுச்சேரி எல்லையில் பெங்களூர் ஐயங்கார் என்ற பெயரில் பேக்கரி இயங்குகி வருகிறது.

இந்த பேக்கரியில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ரவுடிகள் மாமுல் கேட்டுள்ளனர். இதற்கு கடை உரிமையாளர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள்
கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் பேக்கரியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீசார் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக் குப்பத்தைச் சேர்ந்த அப்பு என்ற ரவுடியையும் மற்றும் ஒரு சிறுவனையும் கைது செய்தனர். மேலும் அவர்களை கையில் மாவு கட்டோடு கடைக்கு அழைத்து வந்த போலீசார் மாமூல் கேட்டது எப்படி என்று நடிக்க சொல்லி வீடியோவில் பதிவு செய்தனர்.