• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

காசிக்கு சிறப்பு ரயிலை துவக்கி வைத்த எம்.ஆர்.காந்தி..,

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து காசி நோக்கி சிறப்பு ரயில் ஒன்று நேற்று(நவம்பர்_29) புறப்பட்டது. இந்த ரயிலை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் தலைமையில் துவக்கி வைத்தார்.

மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வரும் “காசி – தமிழ் சங்கமம்” என்ற கலாச்சார நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் காசி ஆகிய இரு பகுதிகளின் கலை, பண்பாடு, மரபு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முக்கிய நோக்கம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று புறப்பட்டது.

காலை 11.45 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் இரண்டு நாட்கள் பயணம் செய்து காசி சென்று அடைகிறது. மொத்தம் 320 பேர் இதில் பயணம் செய்கிறார்கள். இதில் 216 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர்கள். 50 பேர் தமிழ் இலக்கிய வல்லுநர்கள், மேலும் 54 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலாச்சார அறிஞர்கள் ஆவர்.

காசி சென்றடைந்த பிறகு, பயணிகள் வரணாசி, அயோத்தியா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல புனித மற்றும் பாரம்பரிய தலங்களை பார்வையிட உள்ளனர். பின்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாபெரும் காசி–தமிழ் சங்கம நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ் மற்றும் வடஇந்திய கலாச்சாரங்களை இணைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயணம், தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை காசி மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

கன்னியாகுமரியில் நடந்த துவக்க விழா நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் அனுஜா சிவா, மாவட்ட செயலாளர் கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர் சுபாஷ், மாநில செயலாளர் மீனா தேவ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், வடக்கு மண்டல தலைவர் அருள் சிவா , மாவட்ட பொதுச் செயலாளர் நீலேஷ் ராம், ராஜன், சட்டமன்ற பொறுப்பாளர் மணி தணிகை, அழகப்பபுரம் பேரூராட்சி உறுப்பினர் ஶ்ரீகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி துணைப் பொது மேலாளர் சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் ஆகியோர் செய்திருந்தனர்.