தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி மற்றும் 55வது வார்டு சார்பில், தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிறப்பு நற்பணி நிகழ்ச்சி நடைபெற்றது.

பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள சாரதா சக்தி பீடத்தில் ஆதரவற்ற மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, சமூகப் பொறுப்புணர்வை உயர்த்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் S. சேகர் B.A, M.C தெற்கு பகுதி செயலாளர் P. புகழேந்தி, M.C தெற்கு பகுதி துணை செயலாளர் பிரகாஷ், தெற்கு பகுதி இளைஞரணி செயலாளர் T.K. கோட்டி, ஓட்டுநர் அமைப்பு சாரா அமைப்பாளர் எஸ். கணேஷ், 55வது வார்டு துணை செயலாளர் ராகுல் அன்சாரி, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உணவு வழங்கி, துணை முதல்வரின் நலனையும் நீண்ட ஆயுளையும் வேண்டினர்.
சமூகநலத்தையும் சேவையையும் முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நற்பணி நிகழ்ச்சி, உள்ளூர் மக்களிடமும் பாராட்டை பெற்றது.








