ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘கூலி’ தற்போது மூன்றாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் மந்தமாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மிகப்பெரிய தியேட்டர்கள் எண்ணிக்கையில் வெளியானது, ஆனால் மூன்றாவது வாரத்தில் வார நாட்களில் நிலவரம் தெளிவாக சரிவைக் காட்டுகிறது,
இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதால் சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்தது. அதனால் குடும்பப் பார்வையாளர்கள் குறைந்தனர். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் இதுகுறித்து நீதிமன்றம் சென்றும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை.
‘கூலி’ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
நாள் 1 (வியாழன்): ரூ. 65 கோடி
நாள் 2 (வெள்ளி): ரூ. 54.75 கோடி
நாள் 3 (சனிக்கிழமை): ரூ. 39.5 கோடி
நாள் 4 (ஞாயிற்றுக்கிழமை): ரூ. 35.25 கோடி
நாள் 5 (திங்கள்): ரூ. 12 கோடி
நாள் 6 (செவ்வாய்): ரூ. 9.5 கோடி
நாள் 7 (புதன்): ரூ. 7.5 கோடி
நாள் 8 (வியாழன்): ரூ. 6.15 கோடி
வாரம் 1 மொத்தம்: ரூ. 229.65 கோடி
நாள் 9 (வெள்ளிக்கிழமை): ரூ. 5.85 கோடி
நாள் 10 (சனிக்கிழமை): ரூ. 10.5 கோடி
நாள் 11 (ஞாயிற்றுக்கிழமை): ரூ. 11.35 கோடி
நாள் 12 (திங்கள்): ரூ. 3.25 கோடி
நாள் 13 (செவ்வாய்): ரூ. 3.65 கோடி
நாள் 14 (புதன்): ரூ. 4.85 கோடி
நாள் 15 (வியாழன்): ரூ. 2.4 கோடி
வாரம் 2 மொத்தம்: ரூ. 41.85 கோடி
நாள் 16 (வெள்ளிக்கிழமை): ரூ. 1.7 கோடி
நாள் 17 (சனி): ரூ. 2.8 கோடி
நாள் 18 (ஞாயிற்றுக்கிழமை): ரூ. 3.1 கோடி
நாள் 19 (திங்கள்): ரூ. 1.10 கோடி
நாள் 20 (செவ்வாய்): ரூ. 1.3 கோடி
நாள் 21 (புதன்கிழமை): ரூ. 1 கோடி
நாள் 21 வரை மொத்தம்: ரூ. 282.45 கோடி
வன்முறைக் காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தால் கூலியின் கொண்டாட்டம் இன்னும் அதிகமாகியிருக்கும்.
சிம்பு-வெற்றி மாறன் ஜோடி கன்ஃபார்ம்
வருமா வராதா என்ற சலசலப்புகளை கிளப்பிவிட்ட சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாள்.
செப்டம்பர் 4 ஆம் தேதி இயக்குனர் வெற்றி மாறனின் பிறந்தநாளை ஒட்டி சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு) நடிக்கும் ‘STR 49’ படத்தின் முதல் பார்வையை கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார். வெற்றி மாறனுடன் சிம்பு சேர்ந்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
இந்த படத்தில் வழக்கமாக அட்வான்ஸ் சம்பளம் என்று வாங்காமல், லாபத்தில் பங்கு என்ற ஒப்பந்தம் செய்திருக்கிறார் சிம்பு. இதில் இருந்தே வெற்றி மாறனின் ப்ராஜக்ட் மீது சிம்பு எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.
