விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவர் தனது மனைவி ஜீவ ஒளியுடன் சேர்ந்து தனது காரில் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வலையப்பட்டியில் இருந்து ஆலங்குளம் வழியாக. சென்றபோது வளைவு பகுதியில் பின்னால் வந்த சிமெண்ட் கலவை லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிரே வந்த ஆட்டோவிற்கு வழி விடும் முயற்சியில் முன்னாள் சென்ற ஜெயமணி காரின் மீது இடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் மற்றும் லாரி அருகில் உள்ள ஓடையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த தம்பதியரான ஜெயமணி மற்றும் அவர்கள் மனைவி ஜீவஒளி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். கார் மற்றும் லாரி கவிழ்ந்த விபத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் சிக்கியவர்களை மீட்டு சிவகாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கிரஷர் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரியை ஒட்டி வந்தவர் மேலாண்மறைநாடு பகுதியைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் வயது 45 என்பது தெரிய வந்தது இதனை அடுத்து இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.