புதுக்கோட்டை மாவட்டம் மாநகரில் உள்ள புதுக்குளம் தென்புறம் உள்ள
கீழ ஆம் வீதியில் அமைந்துள்ளஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ள செந்தில் ஆண்டவர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

இந்த விழாவில் பக்தர்கள் தங்கள் காணிக்கையாக பூ பழங்கள் மற்றும் மஞ்சள் தாலி கயிறுகள் என பல்வேறு விதமான பொருட்கள் கொடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் முருகன் வள்ளி தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பக்தியுடன் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர். பின்னர்
கோவில் திருச்சபையின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் நிகழ்வில் ஏராள பொதுமக்கள் தங்கள் 7 நாட்கள் பக்தியுடன் விரதம் இருந்து தங்கள் விரதத்தை நிவர்த்தி செய்தனர்.

இதில் நகரில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெளியூரில் இருந்து வந்து இந்த கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செந்தில் ஆண்டவர்ம வள்ளி தெய்வானை வழிபட்டனர்.













; ?>)
; ?>)
; ?>)