• Sat. Apr 27th, 2024

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு…

தமிழர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி இருந்த காலத்திலே, வேலை வாய்ப்பை தேடி வெளி நாடுகளுக்கு சென்ற நாடுகளில் மலோசியா (அன்று சிங்கப்பூரை உள்ளடக்கிய மலையா) பர்மா, இலங்கை என்ற நாடுகளையும் கடந்து கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் பலர். அவர்கள் பணியாற்றிய நாடுகளிலே குடி உரிமை பெற்று பல தலைமுறையை கடந்து விட்டனர். இன்று அத்தகையோரின் வசிப்பிடமே சொந்த நாடாகிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11,12 ஆகிய நாட்களில் “அயலகத் தமிழர் தினம்” என்ற தினத்தை தமிழக அரசு அறிவித்தது.

அயலகத் தமிழர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு (டிசம்பர் _27,ஜனவரி 3,4)ம் தேதிகளில் குடி புகுந்த நாடுகளில் வசிக்கும் அயலகம் இடம் பெயர்ந்து அங்கு வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத் தேடி என்ற பண்பாட்டு பயணத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் பண்பாட்டு பயணம் மேற் கொள்ள ஆஸ்திரேலியா விலிருந்து 14 பேரும், கனடாவில் இருந்து 8 பேரும்,பிஜியில் இருந்து 9 பேரும், இலங்கையில் இருந்து 26 பேரும், என மொத்தம் 57 பேர் தேர்வாகி இருந்தனர்

தமிழக அரசின் செலவில் தேர்வானவர்கள் அனைவரும் முதலில் தமிழகத்தின் தலை நகர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்..

வேர்களைத் தேடி திட்டத்தில் முதல் இடமாக கடந்த மாதம் 27_ம் தேதி. தமிழக அரசின் சுற்றுலாத்துறையின், சுற்றுலா பேரூந்தில் மகாபலிபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். மகபலிபுரத்தின் எழில், பல்லவ மன்னவனின் கலை ஆர்வத்தின் அடையாளமான சிற்பங்களை பார்வையிட்டனர்.

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரிக்கு நேற்று (ஜனவரி_3)ம் தேதி வந்த அயலகத் தமிழர்கள். தமிழக சுற்றுலா துறைக்கு சொந்தமான விடுதியில் தங்கி, கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இயற்கையின் அதிசயத்தை பார்த்ததுடன், மற்றொரு அதிசயமாக நிலப்பரப்பில் ஒரே இடத்தில் சூரிய உதையம், அஸ்தமனம் காட்சியை பார்த்து வியந்தனர்.

கன்னியாகுமரி கடற்பாறையில் வான் தொட முயலும்,மேக கூட்டங்கள் உரசி செல்லும் திருவள்ளுவர் சிலையை அண்ணாந்து பார்த்தனர். சிலை பாதத்திலே பன்னாட்டு அயலகத் தமிழர்கள் ஒன்று கூடி, அவர்களின் வியப்பின் உணர்வை ஒருவர், மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட போது. அயலகத் தமிழர்களிடம் சொல்லப்பட்டது. ஒரு கடந்த கால நிகழ்வு. “சுனாமி”பேரலை கூட்டம் திருவள்ளுவர் தலை தொட்டு வணங்கி சென்றதை, பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின் தாக்குதல் திருவள்ளுவர் சிலைக்கு சின்ன உராய்வைக் கூட ஏற்படுத்தவில்லை!? இதைக் கேட்ட அயலகத் தமிழர்கள் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன.

திருவள்ளுவர் சிலையை தாங்கி நிற்கும் மண்டபத்தின் பக்க கல் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள “திருக்குறளை”தமிழ் தெரிந்த அயலகத் தமிழர்கள் எழுத்துக் கூட்டி வாசித்ததை பார்த்த உடன் வந்த அதிகாரிகள் குறள் குறித்த பொருளை சொன்னதுடன், ஈரடி குறளில் புதைந்து உள்ள பொருளையும் சொல்லி, இதநால் தான் திருக்குறள் உலக பொதுமறை என்ற புகழை பெற்றுள்ளது. விவிலியத்திற்கு அடுத்து அதிகம் மொழிமாற்றம் செய்யப்பட்டதும் திருக்குறள் என தெரிவித்தனர்.

கடலில் அடுத்த படகு பயணத்தில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்ற, தமிழக அரசின் விருந்தினர்கள். சுவாமி விவேகானந்தர் சிலை மற்றும் அந்த மண்டபத்தின் தூண்களில், சிற்பிகள் வடித்திருந்த ஒரு தலையில் நான்கு பசுக்களின் மற்றும் மயிலின் தோற்றத்தை நினைவு மண்டபம் வழிகாட்டி சுட்டிக் காண்பித்தில் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடற்பாறையின் விஷ்தீரமான பகுதியில் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி என இந்த ஊருக்கு பெயர் வரக் காரணமான கன்னிபகவதியம்மனை தரிசித்தனர்.இதனை அடுத்து சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில்.நாகர்கோவில் பெயர் காரணமான நாகராஜா கோயில்.அங்கு கொடுத்த மண் பிரசாதம் இவற்றை அத்தனை அயலகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.

குமரியில் உள்ள திற்பரப்பு அருவி.விண் உயர்ந்த மாத்தூர் தொட்டிபாலம், ஆகியவை இன்று (ஜனவரி_4)ம் நாளில் அயலகத் தமிழர்கள் பார்க்க போகும் இடங்கள் தமிழக அரசின் விருந்தினர்கள் ஆன அயலகத் தமிழர்கள் உடன் இருந்து கவனித்துக் கொண்டவர்கள்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆணையரும் தனித்துணை ஆட்சியர் செண்பக வள்ளி, கண்காணிப்பாளர் கனிமொழி, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சதீஸ் குமார், அகஸ்தீஸ்வரம் வட்ட வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், அயலகத் தமிழர்கள் உடன் இருந்து வழி நடத்தினார்கள்.

அயலகத் தமிழர்களின் முன்னோர்கள் பிறந்து, வளர்ந்து, படித்து நடமாடிய தமிழக பகுதிகளில் வேர்களைத் தேடி வந்து, பார்வையிட்ட இடங்கள் அனைத்தும் அயலகத் தமிழர்கள் மனதில் படியும் மறக்க முடியாத நினைவலைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *