• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விக்ரம் வெற்றி குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

ByA.Tamilselvan

Jun 5, 2022

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவரின் பதிவு சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் – கமல் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார். அதில், நான் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. எனக்கும், விக்ரம் படத்திற்காக நீங்கள் வழங்கி வரும் பேராதரவு வியப்படைய வைக்கிறது. இந்த அன்பை நான் எப்படி திரும்ப கொடுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை என்றும் கமல்ஹாசன் சாருக்கும் மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.