• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கோயில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடங்கி வைத்தார் முதல்வர்!..

Byமதி

Oct 13, 2021

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நகைகளை கணக்கெடுத்து அதை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி அதை வங்கிகளில் முதலீடாக வைத்து, அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு கோவில் பணிகளில் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது இருந்தது. இன்று அந்த திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் உள்ள பொன் இனங்களை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நகைகளை உருக்கி 24 காரட் தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்வதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.