• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உள்ளாட்சி தேர்தல் – எதிர்த்தவர்களின் டெபாசிட் காலி செய்த 90 வயது பாட்டி!..

Byமதி

Oct 13, 2021

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்தவர் பெருமாத்தாள். இவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த பகுதியில் இவர் பலருக்கும் பல வகையில் உதவியதால் பிரபலமானவர்.

எனவே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இருவரை டெபாசிட் இழக்க செய்ததோடு மட்டுமல்லாமல், இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளரை விடவும் ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் 22 வயதே ஆன சாருகலா வெற்றி பெற்றுள்ளார்.

3336 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் மூன்று வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார் பொறியியல் பட்டதாரியான சாருகலா.