சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு – கிலோ 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ இன்று 1200 ரூபாயாக உயர்வு – தொடர் மழை காரணமாக பூக்கள் அழிந்து விட்டத்தால் பூக்களின் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வாக இருந்தாலும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு பூக்களை வாங்கி செல்ல ஏராளமான மக்கள் குவிந்து உள்ளதால் தோவாளை பூச்சந்தை களைகட்டி உள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவிலும் பிரசித்து பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் வழக்கத்தைவிட பண்டிகை காலங்களில் பூக்களை வாங்கிச் செல்வதற்காக உள்ளுர் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்வதால் கூட்டம் அதிகரிக்கும். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ஓசூர் ராயக்கோட்டை சேலம் பெங்களுர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பூக்களை சரஸ்வதி பூஜை பண்டிகைக்காக கொண்டு வரபட்டு உள்ளன. அந்த வகையில் நாளை சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை உள்ளிட்ட நவராத்திரி விழாக்கள் முன்னிட்டு பூச்சந்தை இன்றே களைகட்டியுள்ளது கேரளாவில் இருந்தும் உள்ளுரில் இருந்தும் ஏராளமான மக்கள் பூக்களை வாங்கி செல்ல வந்துள்ளனர். பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
வழக்கமாக கிலோ 100 ரூபாய்க்கு விற்ற செவ்வந்திபூ 200 ரூபாய் ஆகவும், 50 ரூபாய்க்கு விற்ற வாடாமல்லி 200 ரூபாய் ஆகவும் 30 ரூபாய்க்கு விற்ற கோழிக்கொண்டை 80 ரூபாய் ஆககவும், 50 ரூபாய்க்கு விற்ற கிரேந்தி 120 ரூபாய் ஆகவும், 100 ரூபாய்க்கு விற்ற ரோஜாப்பூக்கள் 250 ரூபாய் ஆகுவும், 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ 400 ரூபாய் ஆகவும், 100 ரூபாய்க்கு விற்ற அரளிப்பூ 500 ரூபாய் ஆகவும், 200 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம் 600 ரூபாய் என பல மடங்கு உயர்ந்துள்ளது 400 ரூபாய்க்கு விற்ற மல்லியப்பூ 800 ரூபாயும் 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ 1200 ரூபாய் என மூன்று மடங்காக விலை உயர்ந்துள்ளது இருந்தாலும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை காரணமாக மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர் அண்மையில் பெய்த மழை காரணமாக பூக்கள் அழிந்து உள்ளதால் பூக்களின் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசுவல்;
- நாகர்கோவில் அருகே தோவாளை பூ சந்தை – சரஸ்வதி பூஜை பூ சிறப்பு விற்பனை. – வந்து குவிந்து உள்ள விதம் விதமாக பூக்கள்.
- பேட்டி; சுரேஷ் ( பூ வியாபாரி – தோவாளை பூ சந்தை )